.::TAMILNADU FOLK ARTIST WELFARE BOARD::.
உறுப்பினர் சேர்க்கை

தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியம் தோற்றுவிக்கப்பட்டவுடன், நாட்டுப்புறக் கலைஞர்களை வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினராக சேர்த்திட தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. அம்முகாமில் நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தின் செயல்பாடுகள், வாரியத்தின் வழியாக கலைஞர்கள் பெறக்கூடிய நலத்திட்ட விவரங்கள் முழுமையாக கலைஞர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டதன் அடிப்படையில் நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தின் உறுப்பினராக பதிவு செய்தனர்.

  Click the image to zoom

உறுப்பினராவதற்கு தகுதிகள்

தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் சமூக பாதுகாப்பு மற்றும் நலத்திட்டத்தின் கீழ் 18 வயது முடிந்த 60 வயது முடிவடையாத நாட்டுப்புறக் கலைஞர்கள் தங்கள் விண்ணப்பத்தின் வழியாக உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ளலாம்.
விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டியவை

உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பத்துடன் குடும்ப அடையாள அட்டை, மூன்று பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வயதை நிரூபிப்பதற்கான ஆவணம், கலைகளில் தங்களின் பங்கு குறித்த புகைப்படங்கள், செய்திகள் ஆகியவை இணைக்கப்பட வேண்டும். நாட்டுப்புறக் கலைஞர்கள்
ஒவ்வொருவரும் பதிவு கட்டணமாக ரூ.100 /- செலுத்த வேண்டும். பதிவு செய்யப்பட்ட நாட்டுப்புறக் கலைஞர் ஒவ்வொருவருக்கும் வாரியத்தால் அடையாள அட்டை வழங்கப்படும். மேலும் இரண்டாண்டுக்கு ஒருமுறை அடையாள அட்டையினை புதுப்பித்திட ரூ.10 /- கட்டணமாக செலுத்த வேண்டும்.

அவ்வகையில் இதுவரை தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் 28270 கலைஞர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்து பயன் பெற்று வருகின்றனர்.
Hard N Soft Technologies Pvt Ltd