.::TAMILNADU FOLK ARTIST WELFARE BOARD::.
நிர்வாகக்குழு உறுப்பினர்கள்  |  ஆலோசனைக்குழு உறுப்பினர்கள்
நலவாரியத்தின் நிர்வாகக் குழு

தமிழகத்திலுள்ள அனைத்து நாட்டுப்புறக் கலைஞர்களும் பயன்பெறும் பொருட்டு, தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தின் பணிகளை செம்மைப்படுத்திட ஏதுவாக அரசாணை எண்.143, சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் அவர்களை தலைவராக கொண்டு செயல்பட ஆணை பிறப்பிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், 14 உறுப்பினர்களை கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது.
கலை பண்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் மாவட்ட கலை மன்றங்களின் வழியாக நாட்டுப்புறக் கலைஞர்கள் ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டிருப்பதாலும், கலை பண்பாட்டுத்துறை ஆணையர் அவர்ளை தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தின் உறுப்பினர் செயலாளராக செயல்பட ஆணை பிறப்பிக்கப்பட்டது.

மேலும் வாரியத்தின் செயலராக அரசு துணைச் செயலாளர் நிலையில் ஒரு அலுவலர் நியமனம் செய்திட ஆணை பிறப்பிக்கப்பட்டது.
வாரியத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் விவரம்

தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள்
வாரியத்தின் நிர்வாகக் குழு அமைக்கப்பட்டதை தொடர்ந்து இதுவரை மூன்று நான்கு வாரிய நிர்வாகக் குழு கூட்டங்கள் மாண்புமிகு சுற்றுலா மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடத்தப்பட்டு, அதன் வழியாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு அவை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
வாரியத்தின் ஆலோசனைக்குழு

தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தின் பணிகளை மேம்படுத்திடும் வகையில் அரசாணை (நிலை ) எண்.185 , சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை , நாள் 27.10.2009 வழியாக ஒரு ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டது.

அரசாணையினை தொடர்ந்து ஆலோசனைக்குழு உறுப்பினர்களின் கூட்டம் 06.07.2010 அன்று மாண்புமிகு சுற்றுலா மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் நடைப்பெற்றது.
வாரியத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் விவரம்

தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரிய ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் விபரம்
இக்கூட்டத்தில் செம்மொழி மாநாட்டின் போது நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு அதிகளவில் வைப்பு வழங்கியமைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், வாரியத்தின் பணிகளை செம்மை படுத்திடவும் ஆலோசனை வழங்கப்பட்டது.

மேலும் தவகல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி வாரியத்தின் பணிகள், வாரியத்தின் திட்டங்கள், தொடர்பு அலுவலர்கள் விவரங்கள் அரசு இணைய தளத்தில் (www.tn.gov.in)  வெளியிடப்பட்டுள்ளது.
Hard N Soft Technologies Pvt Ltd