.::TAMILNADU FOLK ARTIST WELFARE BOARD::.
கலைஞர்களுக்கான காப்பீட்டுத் திட்டம்

  Click the image to zoom

உயிர் காக்கும் உயர் சிகிச்சையான கலைஞர் காப்பீட்டுத் திட்ட தொடக்க விழா 23.07.2009 அன்று பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்றபோது, சென்னை மாவட்டத்தில் உள்ள நாட்டுப்புறக் கலைஞர்கள் மாண்புமிகு தமிழக முதல்வரை வரவேற்கும் விதமாக கலை நிகழ்ச்சிகள் வழங்கினர். கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் பலனை நாட்டுப்புறக் கலைஞர்களும் அடையும் பொருட்டு, 31.07.2009
அன்று நடைபெற்ற தமிழ்நாடு நாட்டுப்புறக்கலைஞர்கள் நலவாரியத்தின் மூன்றாவது நிர்வாகக் குழு கூட்டத்தில், ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தினர் கலந்து கொண்டு காப்பீட்டுத் திட்டப்பயன்களை வாரிய உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்தனர். இதனைத் தொடர்ந்து இக்கூட்டத்தில் வாரியத்தில் பதிவு பெற்ற கலைஞர்களுக்கு இத்திட்டத்தினை கொண்டு செல்லலாம் என முடிவு செய்யப்பட்டது.
இதன் விளைவாக தமிழகம் முழுவதும் நாட்டுப்புறக் கலைஞர்கள் உயிர் காக்கும் உயர் சிகிச்சையான கலைஞர் காப்பீட்டுத் திட்டப் பயனை பெரும் பொருட்டு, வாரிய உறுப்பினர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும், 1.11.2009 முதல் 4.11.2009 வரை ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தினரால் சிறப்பு நேர்வாக தனியாக புகைப்படம் எடுக்கும் முகாம் நடத்தப்பட்டு, அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் பயனாக வாரிய பதிவு பெற்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் பயன்பெற்று வருகின்றனர்.
Hard N Soft Technologies Pvt Ltd