.::TAMILNADU FOLK ARTIST WELFARE BOARD::.
நலவாரியத்தின் பணிகள்

 நாட்டுப்புறக் கலைஞர்கள் வாரியத்தால் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் பெற்றிட, கலை பண்பாட்டுத்துறையின் மண்டல உதவி இயக்குநர்கள் கலைஞர்களின் விண்ணப்பங்களை பெற்று தங்களின் பரிந்துரையோடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்ற விண்ணப்பங்களை பரிசீலனை செய்து உரிய காலத்தில் கலைஞர்கள் பயன்கள் பெற்றிட ஏதுவாக உடனுக்குடன் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
 நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு வீட்டுமனைப்பட்டா / தொகுப்பு வீடுகள் வழங்குவதற்கு கலை பண்பாட்டுத்துறையின் மண்டல உதவி இயக்குநர்கள் கலைஞர்களின் விண்ணப்பங்களை பெற்று கலை பண்பாட்டுத்துறை ஆணையரின் பரிந்துரையோடு மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி வைத்து கலைஞர்கள் வீட்டுமனைப்பட்டா / தொகுப்பு வீடுகள் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுவரை 114 கலைஞர்கள் வீட்டுமனைப் பட்டா / தொகுப்பு வீடுகள் பெற்றுள்ளனர்.

  Click the image to zoom

  Click the image to zoom

நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு அவரவர் கலைகளை வெளிப்படுத்தும் இசைக்கருவிகளை மாவட்ட ஆட்சியர் நிதியில் இருந்து பெற்று வழங்கிட கலை பண்பாட்டுத்துறையின் மண்டல உதவி இயக்குநர்கள் கலைஞர்களின் விண்ணப்பங்களை பெற்று கலை பண்பாட்டுத்துறை ஆணையரின் பரிந்துரையோடு மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி வைத்து கலைஞர்கள் இசைக்கருவிகள் பெற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுவரை 388 கலைஞர்கள் மாவட்ட ஆட்சியர் நிதியிலிருந்து ரூ.21,62,360 தொகைக்கு இசைக்கருவிகள் பெற்றுள்ளனர்.

சென்னை, மதுரை அரசு இசைக்கல்லூரிகளில் நாட்டுப்புறக் கலைப் பட்டப்படிப்பு ஒரு பாடமாகவே தற்பொழுது பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.

நலிந்து வரும் நாட்டுப்புறக் கலைகளை ஆவணப்படுத்திட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

  Click the image to zoom

கலை பண்பாட்டுத்துறையால் மாவட்டந்தோறும் வழங்கப்படும் விருதுகளில் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதின் அடிப்படையில், கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. தமிழக அரசால் வழங்கப்படும் உயரிய விருதான "கலைமாமணி" விருதுகளிலும் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்படுகிறது.
  குடியரசு தினவிழாவின் போது ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 நாட்டுப்புறக் கலைஞர்கள் என மாவட்ட ஆட்சியர்கள் மூலம் சிறப்பு செய்யும் பொருட்டு, அவர்களுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டு, பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

 மாநிலங்களுக்கிடையேயான கலை பரிமாற்றத் திட்டத்தின்கீழ் கிராமிய கலைக்குழுக்கள் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

  Click the image to zoom

  Click the image to zoom

சென்னை மற்றும் தஞ்சாவூரில் நடைபெறும் பூங்காவில் பூங்காற்று இசை நிகழ்ச்சிகளிலும், சென்னை பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரையில் நடைபெறும் நாட்டுப்புறக் கலை விழாக்களிலும் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு கலைஞர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

  அரசு விழாக்களில், விழா தொடங்குவதற்கு முன்னர் 1 மணி நேரம் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டு தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சிற்றூர்களில் நாட்டுப்புறக் கலைவிழாக்களை கலை பண்பாட்டுத்துறை மண்டல உதவி இயக்குநர்களின் வழியாக நடத்தப்பட்டு வருகிறது.

 பொதுமக்கள் கூடும் பொருட்காட்சி, கண்காட்சிகளில் நடத்தப்பெறும் கலை நிகழ்ச்சிகளில் நாட்டுப்புறக் கலைகளுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது.

  Click the image to zoom

  Click the image to zoom

தொலைக்காட்சிகளில் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்க கேட்டுக்கொண்டதின் பேரில் பல்வேறு தொலைக்காட்சிகளில் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு வாய்ப்புகள் அளித்தும், நாட்டுப்புறக் கலைகளை பொதுமக்களிடையே கொண்டு செல்லவும் வழிவகைகள் ஏற்படுத்தப்படுகிறது.

 நலிந்த கலைஞர் நிதியுதவி பெறும் திட்டத்தின் கீழ் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு நிதி உதவி வழங்க வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது.
 மாமல்லபுரத்தில் ஒரு மாத காலம் நடைபெறும் நாட்டிய விழாவில் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

 கலை நிகழ்ச்சிகள் வழங்கும் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு பிற கலைஞர்களுக்கு வழங்கப்படும் ஊதிய நிலைக்கு உயர்த்தி தற்போது ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

  Click the image to zoom

Hard N Soft Technologies Pvt Ltd