.::TAMILNADU FOLK ARTIST WELFARE BOARD::.
0 .::TAMILNADU FOLK ARTIST WELFARE BOARD::.
0 மனிதனின் இயற்கையாக வாழ்வில் தோன்றி விதிமுறை வகுப்பின்றி எளிமையாக வளர்ந்து உண்மையான உணர்ச்சிகளின் உறைவிடமாகப் பாமர மக்களைக் கவர்ந்து களிப்படையச் செய்யும் இனிய கலைகளையே நாட்டுப்புறக் கலை என்கிறோம். 0
0
0 கவிஞனுக்கு மரங்கள் ஒலிக்கும்,ஓடைகளில் நூல்கள் மிதக்கும், கற்பனைகளில் காவியங்கள் தெறிக்கும்,யாவற்றிலும் நலன்கள் பிறக்கும் என்பது ஆங்கிலக் கவிஞர் சேக்ஸ்பியரின் வாக்கு. சாதாரண மக்களது ஆசாபாசங்கள், இன்ப துன்பங்கள், எழுச்சி, வீழ்ச்சிகள், ஆரவாரங்கள், அவதிகள், ஏக்கம், எக்காளம், வேதனை, விரக்தி, மருட்சி, மகிழ்ச்சி, வெறுப்பு, வேட்கை ஆகிய பலப்பல உணர்ச்சிகளை சிந்தனைக்குச் சுவைக்க சுவைக்க மகிழ்ச்சியூட்டும் கலைகளே நாட்டுப்புறக் கலைகள். 0
0
0 மனிதனுக்கு இயற்கையாக அமைந்த கலையுணர்வின் அடிப்படையில் தோன்றிய கலைகள் காலவுணர்வுகளினால் பலவகையான மாற்றங்கள் அடைந்து பட்டறிவால் பயன்பாட்டில் பெருகி நுண்ணறிவால் திறம்பெற்று மக்களுக்கு இன்பத்தைக் கொடுக்கும் அரும்பெருஞ் சாதனைகளாக இன்று பல்கிப் பெருகியுள்ளன. முன்னாளில் ஒன்றாக இருந்த சிறு கலைகள் இன்று அமைப்பிலும் வெளிப்படுத்தும் முறையிலும் மாற்றங்கொண்டு தொடர்புடைய பல்வேறு கலைகளாக உருவெடுத்து உள்ளத்தையும் அறிய முடியும். 0
0
0 நாட்டுப்புறக் கலைகள் மனிதனின் உள்ளத்தில் ஊறி எழும் உண்மையான உணர்ச்சிகளின் வடிகால்களாக அமைந்துள்ளன.சுருங்கக் கூறின் இக்கலைகள் மக்களுடைய உணர்ச்சிகளின் உயிரோட்டமான மாற்று உருவங்கள் ஆகும். இன்பம் பொங்கி எழும்,துன்பம் துவண்டு பாயும், வீரம் விளங்கிச் சிறக்கும், சினம் கடுகடுத்துத் தோன்றும், அச்சம் நடுநடுங்கிப் பதுங்கும், இழிவரல் அருகியும் நகை பெருகியும் காணப்படும், இத்தனையும் கூடிக் கலந்து, மனித மனத்தை உருவகித்துக் காட்டுவது நாட்டுப்புறக் கலைகள். நாட்டுப்புறக் கலைகளில் புற நடிப்பை விடவும், உள்ளத் துடிப்பே சிறப்பாக புலப்படும். 0
0
0 மக்களின் பண்பாட்டு உயர்வினைக் காலங்காலமாகத் தாங்கி வரும் நாட்டுப்புறக் கலைகளை நலியவிடக் கூடாது என்று தமிழக அரசும் ஆவல் கொண்டு, தூரத்தில் ஒதுங்கி இருந்த கலைகளை அன்புக்கரம் நீட்டி அழைத்து நகர அரங்குகளில் கொலுவேற்றி நாகரீக மக்களும் நாட்டுப்புறக் கலைகளை காணும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. மதிப்பின்றி இருந்த நாட்டுப்புறக் கலைஞர்களையும், கலைகளையும், வீறு கொண்டு எழும் பொருட்டும் கலைஞர்களின் வாழ்வினை செம்மைப்படுத்திடும் நோக்கத்திலும் , நாட்டுப்புறக் கலைகளை இனங்கண்டு அழியாமல் பாதுகாக்கவும், செவ்வியல் கலைகளுக்கு இணையாக நாட்டுப்புறக் கலைகளை மேம்படுத்துவதற்கும், இக்கலைகளில் பயிற்சியினை இளம்தலைமுறையினருக்கு அளித்திடவும் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியம் அரசால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. 0
0
0 2007 ஆம் ஆண்டு நாட்டுப்புறக் கலைஞர்கள் சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத்திட்டம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதுமுள்ள நாட்டுப்புறக் கலைஞர்கள் அனைவருக்கும் பொருந்தும் வகையில் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தை அரசாணை (நிலை) எண்.70, சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை நாள் 26.04.2007 இன் மூலம் அரசு தோற்றுவித்தது.

அரசாணை (நிலை) எண்.02, சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை நாள் 07.01.2008 ரூ.1,00,00,000/- (ரூபாய் ஒரு கோடி மட்டும்) வழங்கியுள்ளது.

அரசாணை (நிலை) எண்.115, சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை நாள் 12.06.2008 இல் தமிழ்நாட்டில் நிலவும் 100 நாட்டுப்புறக் கலைகளை பயிற்றுவிப்போரும் கலைகளை நிகழ்த்துபவர்களும் உறுப்பினர்களாகச் சேர்க்க ஆணை வெளியிடப்பட்டது.
0
0
Hard N Soft Technologies Pvt Ltd